Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடலுக்கடியில் பாரிய நிலநடுக்கம்! – கனடாவிற்கு சுனாமி எச்சரிக்கை

In கனடா
Updated: 12:20 GMT, Jan 23, 2018 | Published: 11:53 GMT, Jan 23, 2018 |
0 Comments
2172
This post was written by : Puvanes

அமெரிக்க மாநிலமான அலாஸ்கா பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து கனடாவின் மேற்கு கரையோரப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடலுக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அமெரிக்காவின் கடலோரப்பகுதிகள் உட்பட கனடாவின் பலபகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மேற்கு கடற்கரைப்பகுதியில் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு அனர்த்த அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி அறிகுறிக்கான முதல் அலை கனடாவின் சில கடற்கரைப்பகுதிகளை தாக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg