Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசாரணையின் பின்னர் ஊவா முதலமைச்சர் மீது நடவடிக்கை : மஹிந்த சமரசிங்க

In இலங்கை
Updated: 12:39 GMT, Jan 23, 2018 | Published: 12:39 GMT, Jan 23, 2018 |
0 Comments
1153
This post was written by : Puvanes

ஊவா மாகாண முதலமைச்சர் தொடர்பாக முறையான விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் அதிகாரத்திற்கு கட்டுப்படாத தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்த விடயம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் மஹிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பீடத்திலிருந்துநான் இதனை முற்றாக நிராகரிக்கிறேன் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஊவா முதலமைச்சர் அவரின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துதைப் போல், எதிர்த்தரப்பினரும் அவர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சுயாதீன விசாரணையின் பின்னர்தான் யார் குற்றவாளி என்பது குறித்து தீர்மானிக்க முடியும் எனவும், இந்த விடயத்தில் தற்போது ஜனாதிபதி தலையிட்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் எனவும் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg