Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காயத்தால் காலிறுதியுடன் வெளியேறினார் நடால்

In டெனிஸ்
Updated: 16:19 GMT, Jan 23, 2018 | Published: 16:19 GMT, Jan 23, 2018 |
0 Comments
1098
This post was written by : Sujitharan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் காலிறுதி சுற்றில் காயம் காரணமாக உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான  ரஃபேல் நடால் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

காலிறுதியில் குரோஷிய வீரர் மரின் கிளிச்சை எதிர்கொண்டபோது 3-6, 6-3, 6-7, 6-2, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் நடால் பின்தங்கிய போது காயம் ஏற்பட்டதால் வெளியேறினார்.

தற்போது கிளிச் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளார்.

கடந்த பல ஆண்டுகள் காயங்காரணமாக ஒதுங்கியிருந்த நடால் 2017ம் ஆண்டில் சிறப்பாக விளையாடி பிரஞ்சு பகிரங்கப்பட்டத்தையும் அமெரிக்கப்பகிரங்கப்பட்டத்தையும் கைப்பற்றியதுடன் அவுஸ்திரேலிய பகிரங்கப்போட்டியில் இறுதிபோட்டிக்கு முன்னேறி ரொஜர் பெடரரிடம் தோல்வி கண்டிருந்தார்.

இம்முறை வருடத்தின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே அவர் காலிறுதியில் காயங்காரணமாக வெளியேற நேர்ந்தமை துரதிஸ்டவசமானது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg