Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜாஸ் மேதையை இழந்து இசை உலகு தவிக்கிறது!!

In
Updated: 16:21 GMT, Jan 23, 2018 | Published: 16:21 GMT, Jan 23, 2018 |
0 Comments
1351
This post was written by : elayathambi

தென்னாபிரிக்க ஜாஸ் இசையுலகின் தந்தை என அறியப்படும்  மாபெரும் இசைக் கலைஞனும், நிற வெறிக்கெதிரான போராளியுமான ஹியூ மசெக்கெலா (Hugh Ramopolo Masekela) காலமானார். புற்று நோய்க்கு இலக்காகி இருந்த 78 வயதினரான  மசெக்கெலா இன்று ஜொகனஸ்பேர்க்கில் காலமானார்.

தென்னாபிரிக்கா வெள்ளையரின் நிறவெறி ஆட்சிக் காலத்தில் இருந்த வேளையில், அதற்கெதிராக இசை ஆயுதம் ஏந்திய மாபெரும் கலைஞனாக ஹியூ மசெக்கெலா கருதப்படுகிறார். நிற வெறிக்கு எதிராகவும், 1976 இல் தென்னாபிரிக்க சுவெட்டோவில் மாணவர்களால் நடத்தப்பட்ட எழுச்சியைக் குறித்தும், மசெக்கெலாவால் எழுதப்பட்ட சுவெட்டோ ப்லூஸ் Soweto Blues என்றபாடலும், 1986 இல் அவர் வெளியிட்ட நாளை (Tomorrow)  என்ற இசைப்பேழையின் முதற்பாடலும், நிறவெறிக்கு எதிரான பிரசாரப் பாடலாகவும் ஒலித்த Bring him back home என்ற பாடலும் இன்று வரை அவர் நினைவாக உயிர்ப்போடிருக்கின்றன.

(1987 இல் போல் சைமனால் சிம்பாப்வேயில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆபிரிக்க இசைவிழாவில் Masekela  பாடிய Bring him back home Nelson Mandela பாடல். நன்றி : John Hatzis)

தென்னாபிரிக்க விடுதலைப் போர் வரலாறானது, என்றுமே ஹியூ மசெக்கெலாவை மறந்து விடாது என்று, தனது இரங்கல் செய்தியில் தென்னாபிரிக்க அதிபர் சூமா தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க இசை உலகும், ஒட்டு மொத்த தேசமும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பைச் சந்தித்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

மசெக்கெலா தன் ஆபிரிக்க ஜாஸ் இசை  ஆழுமையின் வாயிலாக உலகறிந்த பெருங்கலைஞனாக அறியப்பட்டவர்.  Grammy award  பெற்ற மசெக்கெலா, ரோட்ஸ் மற்றும் யோர்க் பல்கலைகழகங்களால் கௌரவ முனைவர் பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டவர். பிபிசி வானொலியின் சர்வதேச ஜாஸ் இசை விருது இவருக்கு 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இவை தவிர இன்னும் பல சர்வதேச அங்கீகாரங்களையும் விருதுகளையும் வென்ற ஹியூ மசெக்கெலா, அவரின் இசைக்கு அப்பாலான சமூகப் பணிகளுக்காக என்றென்றும் வாழ்ந்திருக்கும், ஒப்பற்ற இசைக் கலைஞனாக கருதப்படுகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg