Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல்களை கண்காணிக்க 7000 பேரை பணியமர்த்த திட்டம்!

In இலங்கை
Updated: 08:37 GMT, Jan 24, 2018 | Published: 08:37 GMT, Jan 24, 2018 |
0 Comments
1089
This post was written by : Puvanes

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு தேர்தலுக்கான முன்னாயத்தங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் தேர்தலை கண்காணிப்பதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளவர்களுக்கு தற்போது பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெப்ரல் எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை என்னும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg