Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பதவி விலகல்

In இலங்கை
Updated: 09:15 GMT, Jan 24, 2018 | Published: 08:45 GMT, Jan 24, 2018 |
0 Comments
1130
This post was written by : Risha

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான ஷபீக் ரஜாப்தீன் அப்பதவிகளில் இருந்து இன்று (புதன்கிழமை) ராஜினாமா செய்துள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களை இழிவுபடுத்தி அவர் முகநூலில் கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளக்கம் கோரியதை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்மாந்துறையை சேர்ந்த முகநூல் நண்பர் ஒருவருடன் மெசஞ்ஜர் மூலம் சமகால அரசியல் தொடர்பாக விவாதிக்கும்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்தும் இழிவுபடுத்தியும் ஷபீக் ரஜாப்தீன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனை குறித்த நபர் முகநூல் வாயிலாக அம்பலப்படுத்தியதை தொடர்ந்து அவர் மீது பலத்த கண்டனமும் விமர்சனமும் எழுந்திருந்தது.

ஷபீக் ரஜாப்தீனின் இந்த நடவடிக்கையினால் கட்சி மீதும் தலைமைத்துவம் மீதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கட்சி முக்கியஸ்தர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் ஷபீக் ரஜாப்தீனிடம் விளக்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg