Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது எனது பொறுப்பு: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 09:10 GMT, Jan 24, 2018 | Published: 09:08 GMT, Jan 24, 2018 |
0 Comments
1147
This post was written by : Risha

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தனிப்பட்ட முறையில் தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்துடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் பொறுப்பை தனிப்பட்ட முறையில் நான் பொறுப்பேற்கின்றேன்.

மத்;திய வங்கி பிணைமுறை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சில பக்கங்களை காணவில்லையென சிலர் கூக்குரலிட்டு வருகின்றனர். ஆனால், அதில் பக்கங்கள் எதுவும் குறைவடையவில்லை. சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே ஆவணங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

அதனை வெளியிடுவதன் மூலம் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் நன்மை அடைவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg