Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

In இலங்கை
Updated: 09:25 GMT, Jan 24, 2018 | Published: 09:25 GMT, Jan 24, 2018 |
0 Comments
1216
This post was written by : Risha

2018ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம், இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள குறித்த வெற்றிக்கிண்ணம், முதலாவது பயணமாக நேற்று இலங்கைக்கு கொண்வரப்பட்டது.

வெற்றிக்கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா மற்றும் இலங்கை கால்பந்து குழுவின் உறுப்பினர்களும் 1998ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கால்பந்து வெற்றிக்கிண்ணத்தை வெற்றிகொண்ட பிரான்ஸ் கால்பந்து குழுவினரும் பங்குபற்றினர்.

ஆசிய நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு மாத்திரமே 2018 – கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்றைய தினம் விசேட விமானத்தின் மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை இலங்கை கால்பந்து ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக இன்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg