Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனுஸ்தீவு குடியேற்றவாசிகள்: அமெரிக்காவில் 40 பேர் மீள்குடியேற்றம்

In
Updated: 14:31 GMT, Jan 24, 2018 | Published: 09:22 GMT, Jan 24, 2018 |
0 Comments
1223
This post was written by : Suganthini

பப்புவா நியூகினியின்  மனுஸ்தீவு  தடுப்பு முகாமிலிருந்த  40 புகலிடக் கோரிக்கையாளர்கள், அமெரிக்காவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குமிடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் மீள்குடியேற்றும் உடன்படிக்கையொன்று கடந்தகாலத்தில் செய்துகொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையின்கீழ், ஆயிரத்து 250 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் மீள்குடியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மனுஸ்தீவு  தடுப்பு முகாமிலிருந்த  54 பேர் முதற்கட்டமாக கடந்த செப்டெம்பரில் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போது இரண்டாவது கட்டமாக 40 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மனுஸ்தீவிலுள்ள இன்னும் 18 பேர், எதிர்வரும் மாதமளவில் அனுப்பிவைக்கப்படுவரென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg