Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருக்கோவிலில் திருடப்பட்ட கால்நடைகள் அக்கரைப்பற்றில் மீட்பு

In
Updated: 10:35 GMT, Jan 24, 2018 | Published: 09:52 GMT, Jan 24, 2018 |
0 Comments
1093
This post was written by : poovannan
watermark

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் மாடுகளை திருடி விற்பனை செய்த ஐந்து பேர் திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருக்கோவில் 2ஆம் பிரிவு அக்கிராசப்பிள்ளையார் வீதியிலுள்ள ஒருவரின் 2 மாடுகள் அவரது மாட்டுப்பட்டியில் இருந்து கடந்த 14ஆம் திகதி காணாமல் போயுள்ளன. குறித்த மாடுகள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாடுகளின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டதோடு, இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவர்கள் மாடுகளை திருடி விற்பனை செய்துள்ளமை தெரியவந்தது. குறித்த மூன்று பேரும் வழங்கிய தகவல்களின் பிரகாரம் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg