Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மீது தாக்குதல்!

In இலங்கை
Updated: 05:08 GMT, Jan 25, 2018 | Published: 05:08 GMT, Jan 25, 2018 |
0 Comments
1073
This post was written by : Vithushagan

டயகம – அக்கரப்பத்தனை, வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு போட்டியிடும் இவ்வேட்பாளர் மீது, டயகம கொலனி பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த வேட்பாளர்  டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாகதாக, தாக்குதலுக்கு உள்ளாகியவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்தவர்களே தன்மீது தாக்குதல் நடத்தியதாக செல்வராஜ் ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் தனிப்பட்ட குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகறாரே இதற்குக் காரணம் என்றும் டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மற்றுமொருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg