Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதானத்தை பெறும் வழியாக வியன்னா பேச்சுவார்த்தை அமையும்: சிரிய எதிர்தரப்பு

In உலகம்
Updated: 06:06 GMT, Jan 25, 2018 | Published: 06:06 GMT, Jan 25, 2018 |
0 Comments
1213
This post was written by : Elakkiya

சிரியாவில் இராணுவ தீர்வை விடவும் அரசியல் தீர்வே சிறந்தது என்ற தமது உறுதிப்பாட்டை அனைத்து நாடுகளும் நிரூபிப்பதற்கான உண்மையான சோதனையாக வியன்னா பேச்சுவார்த்தைகள் அமையும் என சிரிய எதிர்தரப்பின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் நாஸ்ர் ஹரிரி தெரிவித்துள்ளார்.

வியன்னாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அடுத்த இரு நாட்களில் சிரிய எதிர்தரப்பினர் தீர்மானிப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் ஏற்பாட்டில் சொச்சியில் நடைபெறவுள்ள சிரிய அமைதிக்கான மாநாட்டுக்கு ஒருசில தினங்களுக்கு முன்னதாகவே இன்று வியன்னாவில் சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஜனவரி 29 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ரஷ்ய ஆதரவுப் பேச்சுவார்த்தைகள் சொச்சியில் நடைபெறவுள்ளன.

இவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் சபையை கீழறுக்கும் மற்றும் டமாஸ்கஸ் அரசாங்கத்திற்கு மிகவும் பொருத்தமான தீர்வுக்கு அடிப்படை அரசியல் பாதையை உருவாக்குவதே மொஸ்கோவின் நோக்கம் என மேற்கத்தய மற்றும் சில அரேபிய நாடுகளும் நம்புகின்றன.

இந்நிலையில், வியன்னாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் தவிர, சிரியாவில் ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வழிவகை எதுவும் இல்லை என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg