Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோக்கியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மெர்க்கல், மக்ரோங் தோற்றத்திலான பொம்மைகள்

In ஐரோப்பா
Updated: 07:02 GMT, Jan 25, 2018 | Published: 07:02 GMT, Jan 25, 2018 |
0 Comments
1112
This post was written by : Elakkiya

ஜப்பானிய பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளரான கியூகெட்சு, ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் பெண்கள் தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பெண்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான அர்ப்பணிப்பாக இன்று (வியாழக்கிழமை) இந்த பொம்மைகளை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

38 சென்ரி மீற்றர் சுற்றுப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு பொம்மைகளும் ஜப்பானிய பாரம்பரிய கிமொனோ உடையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இவை விற்பனைக்காக வடிவமைக்கப்படவில்லை எனினும் சுமார் 5 லட்சம் யென் பெறுமதியானவை என கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இரு பொம்மைகளும் பெண்கள் தினமான மார்ச் 3 ஆம் திகதிவரை காட்சிக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் உலகில் செல்வாக்குமிக்கவர்களை தேர்தெடுக்கும் வடிவமைப்பாளரான கியூகெட்சு இவ்வாண்டு உலக சமாதானத்தை அடைய முயற்சிக்கும் நம்பிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை தேர்தெடுத்ததாக தெரிவிக்கிறார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையில் 2016 ஆம் ஆண்டில் கிலாரி கிளிங்டனின் உருவத் தோற்றத்தில் மொம்மை ஒன்றை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg