Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெர்பரை போராடி வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தார் ஹெலப்!

In டெனிஸ்
Published: 07:56 GMT, Jan 25, 2018 |
0 Comments
1109
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் தகுதிபெற்றுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார்.

மிகவும பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை ஹெலப், 6-3 என கைப்பற்றினார். இதனையடுத்து இரண்டாவது செட்டில் ஹெலப்பிற்கு நெருக்கடி கொடுத்த கெர்பர், இரண்டாவது செட்டை 6-4 என வென்றார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்று, மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில் வெற்றிபெறுவதற்காக இருவரும் கடுமையாக போராடினர். ஆனால் இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடிய ஹெலப், மூன்றாவது செட்டை 9-7 என கைப்பற்றி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

இறுதி போட்டியில், சிமோனா ஹெலப், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகியை எதிர்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg