Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டொனால்ட் ட்ரம்பின் அணுசக்தி கொள்கையை வெளியிட பென்டகன் தீர்மானம்

In
Updated: 07:45 GMT, Jan 25, 2018 | Published: 07:44 GMT, Jan 25, 2018 |
0 Comments
1172
This post was written by : Elakkiya

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அணுசக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு பென்டகன் தீர்மானித்துள்ளது. அதன்படி அடுத்தவாரம் குறித்த அணுசக்தி கொள்ளை அறிமுகப்படுத்தப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்க பென்டகனில் இந்த நடவடிக்கை ஆயுதப் போட்டி மற்றும் அணுகுண்டு மோதலை தூண்டிவிடும் என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே கசிவடைந்த அணுசக்தி கொள்கை வரைபின் பிரகாரம், தந்திரோபாய அணுவாயுதங்கள் என்று அழைக்கப்படும் குறைந்தபட்ச விளைவை ஏற்படுத்தும் ஒரு புதிய வகை அணுகுண்டின் உருவாக்கத்திற்கு பென்டகன் அழைப்பு விடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை வழக்கமான ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் வலிமை வாய்ந்தவையாக இருந்தாவும் வரையறுக்கப்பட்ட விளைவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்றும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg