Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: இறுதிகட்டத்திற்கு நுழைந்தார் மரின் சிலிக்!

In டெனிஸ்
Updated: 04:14 GMT, Jan 26, 2018 | Published: 04:14 GMT, Jan 26, 2018 |
0 Comments
1063
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குரோஷிய வீரர் மரின் சிலிக், வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிக், பிரித்தானிய வீரர் கெய்ல் எட்மன்டை எதிர்கொண்டார்.

இரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், சிலிக் இரண்டம் செட்டைத் தவிர ஏனைய இரு செட்களையும் இலகுவாக வெற்றி கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 7-6, 6-2 என்ற நேர் செட்களில் சிலிக் வெற்றி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg