Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா.வின் பொருளாதாரத்தடையை மீறி ரஷ்யாவுக்கு வடகொரியா நிலக்கரி ஏற்றுமதி!

In உலகம்
Updated: 05:38 GMT, Jan 26, 2018 | Published: 05:38 GMT, Jan 26, 2018 |
0 Comments
1264
This post was written by : Suganthini

ஐ.நா.வின் பொருளாதாரத்தடையை மீறி, ரஷ்யாவுக்கு வடகொரியா கடந்த வருடம் நிலக்கரியை ஏற்றுமதி செய்ததுடன், அந்நிலக்கரி ரஷ்யாவிலிருந்து தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பரிமாறப்பட்டதாக, மேற்கு ஐரோப்பிய ஒன்றிய புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைக் கண்டித்து, வடகொரியாவுக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி ஐ.நா. பாதுகாப்புச்சபை பொருளாதாரத்தடை விதித்தது. இதன் மூலம் வடகொரியா, நிலக்கரியை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது.

ஐ.நா.வின் இப்பொருளாதாரத்தடையை மீறி, ரஷ்யாவுக்கு 3 தடவைகள் நிலக்கரியை வடகொரியா ஏற்றுமதி செய்ததுடன், இது ரஷ்யாவின் நாக்கோட்கா (Nakhodka) மற்றும் கொம்ஸ்க் (Kholmsk) துறைமுகங்களில் ஏற்றியிறக்கப்பட்டு கப்பல்கள் மூலமாக தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அனுப்பப்பட்டதாக, அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த நிலக்கரி ஏற்றுமதி மூலமாக எந்த நிறுவனங்கள் லாபம் அடைந்தன என்பது தொடர்பாகத் தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg