Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீக்குளித்த சாரதி உயிரிழப்பு

In இந்தியா
Updated: 07:05 GMT, Jan 26, 2018 | Published: 07:05 GMT, Jan 26, 2018 |
0 Comments
1174
This post was written by : Kemasiya

பொலிஸாரினால் பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக கூறி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தீக்குளித்த வாடகைக்கார் ஓட்டுநர் மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த இவர், நேற்று (வியாழக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார்.

இவர் மீது பொலிஸார் பொய்யான கொலை குற்றச்சாட்டை முன்வைத்ததோடு தவறான வார்த்தைகளால் பேசியதனால் தான் தீக்குளித்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடைய உடல் இதுவரை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg