Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசாங்கங்களின் உதவி தேவை – தெரேசா

In
Updated: 07:02 GMT, Jan 26, 2018 | Published: 07:02 GMT, Jan 26, 2018 |
0 Comments
1212
This post was written by : Suganthini

நவீன காலத்தில் தொழில்நுட்பம் முக்கியத்துவம்பெற்று விளங்குவதன் காரணமாக, வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசாங்கங்கள் மேலதிக உதவிகளை வழங்க வேண்டுமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அம்மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘தொழில்நுட்பம் எமது முன்னேற்றத்துக்குச் சிறந்தவழியென்பதுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எவ்வாறு முன்னேற வேண்டுமென்பது தொடர்பாகவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆகவே, தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்துக்குமத்தியில், சிறந்த வர்த்தக வாய்ப்புகளைக் பெற்றுக்கொள்வதற்காகவும், உலகளாவிய ரீதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அரசாங்கங்களும் வர்த்தகத் தலைவர்களும் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்.’ என்றார்.

அத்துடன், ‘ அரசாங்கங்கள் வர்த்தக வளர்ச்சியை அனுமதிக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg