Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: கொல்காத்தா அணியை பந்தாடியது சென்னை அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:51 GMT, Jan 26, 2018 | Published: 09:51 GMT, Jan 26, 2018 |
0 Comments
1137
This post was written by : Anojkiyan

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 56வது லீக் போட்டியில், சென்னையின் எப்.சி. அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் அட்லெடிகோ டி கொல்காத்தா அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து, புள்ளிப்பட்டியலில், 23 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.
நேற்று (வியாழக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.

இப்போட்டியின் 44வது நிமிடத்தில் கொல்கத்தாவின் மார்டின் பாட்டர்சன் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதையடுத்து சென்னை அணி பதில் கோல் போட பல முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் 1-0 என கோல் கணக்கில் கொல்கத்தா முன்னிலையில் இருந்தது.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் சென்னை அணியின் மெய்ல்சன் அல்வ்ஸ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 64வது நிமிடம் சென்னையின் ஜேஜே இரண்டாவது கோல் அடித்தார். இதன் பின் கடுமையாக முயற்சித்தும் கொல்காத்தா அணியால் பதில் கோல் போடவில்லை. இதனால் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg