Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 09:57 GMT, Jan 26, 2018 | Published: 09:57 GMT, Jan 26, 2018 |
0 Comments
1131
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், தென்கொரியாவின் இளம் வீரரான ஹையோன் சுங்கை எதிர்கொண்டார்.

இளம் வீரராக இருந்தாலும், அனுபவ வீரரான பெடரரருக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹையோன் சுங், முதல் செட்டை 6-1 என எளிதாக இழந்தார்.

இரண்டாவது செட்டில் அதே ஆக்ரோஷத்துடன் விளையாடிய பெடரர், 5-2 என முன்னிலை பெற்றிருந்த போது, ஹையோன் சுங்கிற்கு முதுகுதண்டு வலி ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

போட்டியின் விதிகள் அடிப்படையில் பெடரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்ற பெடரர், இறுதிபோட்டியில் குரோஷிய வீரரான மரின் சிலிக்கை எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg