Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்களித்தவர்கள் வாக்குச்சீட்டினை சமூக வலைத்தளங்களில் பகிர்வது குற்றம்: எம்.எம்.முஹமட்

In இலங்கை
Updated: 12:00 GMT, Jan 26, 2018 | Published: 12:00 GMT, Jan 26, 2018 |
0 Comments
1186
This post was written by : Varothayan

தபால் மூலம் வாக்களித்தவர்களில் சிலர் தங்களது வாக்குச்சீட்டினைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் குற்றமாகும்.

எனவே, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தேர்தல் குற்றத்திற்காக அவர்கள் மீது தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.

எமது செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறித்த அரசாங்க ஊழியர் தனது உத்தியோகத்தை இழக்கும் நிலை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெப்ரவரி இரண்டாம் திகதிக்கு பிறகு எந்தவொரு வாக்காளருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படாது எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg