Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அவுஸ்ரேலிய தேசிய தினம்

In
Updated: 11:34 GMT, Jan 26, 2018 | Published: 11:34 GMT, Jan 26, 2018 |
0 Comments
1085
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் தேசிய தினம் இன்று (வெள்ளிக்கிழமை) மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்ட  அதேவேளை, அத்தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்ரேலியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

காலனித்துவ ஆட்சியுடன் தொடர்புடைய தேசிய தினத்தை மாற்றக் கோரியும் பழங்குடியின மக்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்தும் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகர் உட்பட பல நகரங்களில் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அவுஸ்ரேலியாவின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிட்னி துறைமுகப் பாலத்தடியில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.  தேசிய கீதம் இசைத்தலுடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன், தேசிய தினத்தையிட்டு 21 துப்பாக்கி வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.

அத்துடன், தேசிய கொடிகளினால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் கடலில் அணிவகுத்து பயணித்ததுடன், தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு ஹெலிகொப்டர்களும் பறந்தன. மேலும், வானவேடிக்கை நிகழ்வு, பாரம்பரிய புகைத்தல் விழா மற்றும் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வைக் கண்டுகளிப்பதற்காக, சிட்னி துறைமுகப் பகுதியில் பெருமளவான மக்கள் கூடியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg