Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசை நிறைவேறாததால் அதிருப்தியில் பெடரர்!

In டெனிஸ்
Updated: 04:05 GMT, Jan 27, 2018 | Published: 04:04 GMT, Jan 27, 2018 |
0 Comments
1112
This post was written by : Risha

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இறுதி போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி என்ற போதிலும் சில அதிருப்திகள் உள்ளதாக இரண்டாம் நிலை வீரரரும், சுவிட்சர்ந்தின் முன்னணி வீரருமான ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அரையிறுதி போட்டியில், பெடரரை எதிர்கொண்ட தென்கொரியாவின் இளம் வீரரான ஹையோன் சுங், முதுகுவலியின் காரணமாக போட்டியின் இடை நடுவே விலகினார். இதனால் பெடரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெடரர், “இறுதி போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி. ஆனால் இவ்வாறு ஒரு போட்டியாளர் இடைநடுவே வெளியேறியதன் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியதை நான் விரும்பவில்லை. நான் போராடி வென்று இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமென்றே ஆசைப்பட்டேன்” என கூறினார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் பெடரர், குரோஷிய வீரரான மரின் சிலிக்கை எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg