Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷிய ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

In
Updated: 11:11 GMT, Jan 27, 2018 | Published: 11:11 GMT, Jan 27, 2018 |
0 Comments
1255
This post was written by : Suganthini

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவும், பாகிஸ்தான் பிரதமர் ஸாஹிட் ஹெக்கான் அபாஸியும்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமரை இன்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஒன்றாக இணைந்து தீவிரப்படுத்தவும், பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களைக் கட்டமைப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படவும் இவர்கள் இருவரும் இணங்கியுள்ளனர்.

இதேவேளை இரு நாடுகளினதும் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை பலப்படுத்தவும் இவர்கள் இருவரும் இணங்கியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg