Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏழு நாட்களில் பளபளப்பான மேனியைப் பெற்றுக் கொள்ளும் எளிய முறைகள்

In
Updated: 13:10 GMT, Jan 27, 2018 | Published: 13:10 GMT, Jan 27, 2018 |
0 Comments
1075
This post was written by : Puvanes

ஒருவர் மதிப்பீடு செய்யப்படுவது வெளித்தோற்றத்தைக் கொண்டுதான். என்னதான் அழகான மனமும், குணமும் இருந்தாலும் ஒருவரை சட்டெனக் காட்டும் புறத்தோற்றமே முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

அதேபோல பெண்களும் தமது புறத்தோற்றத்தை அழகாக்கிக்கொள்ள பலவகை செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதிலும் மேனியை பளபளப்பாகவும், சிவப்பாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தற்காலப் பெண்களுக்கு ஓர் போதை என்றும் கூறிவிடலாம்.

இதற்காக செயற்கையான கிறீம்களை பெண்கள் நாடிச்செல்வதால் ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டு அதனால் பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இதில் இருந்து காத்துக் கொள்ள எளிய முறைகளைப் பார்க்கலாம் அதிலும் குறிப்பாக இந்த முறைகளைக் கையாண்டால் வெறும் ஏழு நாட்களுக்குள் முகம் பொழிவடைந்து பளபளப்போடு கூடிய அழகைப்பெற்றுக்கொள்ள முடியும் என்பது முக்கியமானதொன்று.

அப்பிள் பழம் மேனியை பளபளப்பாக்குவதில் முக்கிய பங்களிப்பினைச் செய்து வருகின்றது. தோல் நீக்கிய அப்பிளை பாலுடன் சேர்த்து ஊறவைத்த பின்னர் சிறிதளவு எழுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக அரைத்து அதனை முகத்திற்கு தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்களின் பின்னர் பனிக்கட்டியால் மசாஜ் செய்யும் போது மேனி பளபளப்பாவதோடு மென்மையானதாகவும் மாறும்.

தக்காளியுடன் சோடா மற்றும் தேன் ஆகியன சேர்த்து நன்றாக அரைத்து பூசிய பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமடைவதோடு எண்ணெய்த் தன்மையும் அகன்றுவிடும்.

தோடம்பழசாற்றினை பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரத்தின் பின்னர் முகத்தை நன்றாக கழுவவேண்டும். இதனால் தோடம்பழத்தில் உள்ள விட்டமின் சத்துக்கள் முகத்தை பளபளப்பாக மாற்றும்.

பப்பாசிப்பழமும் மேனியை பளபளப்பாக்கும் பழங்களில் முக்கியமானதொன்று. பப்பாசிப்பழத்தியையும் வெள்ளரிக்காய் துண்டுகளையும் நன்றாக அரைத்து முகத்தில் பூசிய பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும் தொடர்ச்சியான இச்செயல் முகத்தின் கரும்புள்ளிகளை மறைத்து பளப்பாக்கிவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg