Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடியிடை வேண்டுமா? – இவற்றை முயற்சி செய்யவும்

In
Updated: 13:27 GMT, Jan 27, 2018 | Published: 13:19 GMT, Jan 27, 2018 |
0 Comments
1109
This post was written by : Puvanes

அதிக வயிறு பெண்களின் அழகுக்கு முதல் எதிரி. என்னதான் மேனியை பளபளப்பாக மாற்றிக்கொண்டும், முகத்தினை பொழிவாக மாற்றிக்கொண்டாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்பட்டால் அவர்களின் அத்தனை அழகும் பாதியாக குறைந்துபோய்விடும்.

இதற்காகத்தான் “கொடியிடையாள்” என பெண்கள் வர்ணிக்கப்படுவதுண்டு. இலக்கியங்கள் முதல் இக்காலம் வரை பெண்களின் இடையை வர்ணிக்காத கவிகளும் கூட இல்லை. பெண்ணிடை அழகில் சொல்ல வந்ததும் மறந்தது இதற்காகத்தான் இடை அழகு வேண்டும் என்பது.

பெண்கள் உணவுக்கட்டுப்பாடு அதாவது உணவைக்குறைத்து விட்டால் மாத்திரம் தொப்பையை குறைத்துவிடலாம் என எண்ணுவார்கள் இது முற்றிலும் தவறானது. உணவை குறைப்பதற்கு பதில் கட்டுப்பாடு அவசியம் அதாவது நாகரீக உணவுகளை உண்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

நார்ச்சத்து ஊட்டச்சத்து நிறைந்த மறக்கறி வகைகள் மற்றும் தானிய வகைகளை உண்பது தொப்பையை குறைக்கும். அத்தோடு அதிகளவு நீர் பருகுவதும் நன்மைதரும்.

தசைகளின் ஒரு சீரான வளர்ச்சி மற்றும் மேலதிக கொழுப்பினைக் கரைக்கும் உணவுகளில் அவரை மற்றும் பருப்புவகைகள் போன்றன பெரிதும் உதவி செய்கின்றன.

எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகளை உண்பதற்கு பதிலாக பாதாமினை உண்டுவருவது தொப்பை குறைந்து சிறப்பான இடையை பெற்றுக்கொள்ள உதவும்.

அதேபோல கொழுப்பைக் கரைக்கும் பணியினை குடைமிளகாயும் அதிகமாக செய்துவருகின்றது. அதன் சிறப்பறிந்து உட்கொண்டு வருவது உடல் உடையைக்குறைக்க உதவி செய்கின்றது.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க வெறுமனே உணவை மட்டும் மாற்றிவிட்டு சிறிது கூட உடற்பயிற்சிகளைச் செய்யாமல் இருந்தால் இடை இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் அதனால் சீரான உடற்பயிற்சியினையும் செய்து வருவதும் பெண்களுக்கு நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg