Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விதியை மாற்ற முடியும்! – கர்ம வினையையும் வெல்ல முடியும்

In
Updated: 14:08 GMT, Jan 27, 2018 | Published: 14:08 GMT, Jan 27, 2018 |
0 Comments
1555
This post was written by : Puvanes

“விதி மதியால் வெல்லப்படும்” இந்தக் கூற்றுக்கு ஆன்மீகத்தின் வழியில் வேறு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதர்களின் விதியை இறைவழிபாடு எனும் மதியின் ஊடாக வென்றுவிடலாம் என்பதே அது.

கர்மவினையை மாற்ற முடியாது என்றும் ஓர் கருத்து இருக்கின்றது. என்றாலும் கர்மத்தின் வினையில் இருந்து மீட்டுக்கொள்ளத்தானே மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர் இங்கு இறைவன் என்ற ஒருவன் மீது நம்பிக்கை வைத்தால் அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்.

கடவுள்வழிபாடு அல்லது இறை நம்பிக்கை என்பது எதற்காக? என்னதான் கடவுளை விழுந்து விழுந்து வணங்கினாலும் பலன் மட்டும் கிடைப்பதே இல்லையே எனப் பலர் நினைப்பதுண்டு சொல்வதும் உண்டு.

இந்தக்கேள்வியை முன்வைக்கும் முன்னர் ஒரு சிறு கேள்வி துன்பம் வரும்போது இறைவனைத் தேடுபவர்களில், மகிழ்ச்சியின் போது இறைவனை நினைத்து அவனை வழிபடுபவர்கள் எத்தனைப்பேர்? நிஜத்தில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கடவுளை நினைப்பது இல்லை என்பதே உண்மை.

இந்த சுயநல வழிபாடு எதற்காக எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தினைக் கொடுக்கின்றாய் இறைவா எனக் கேட்பவர்கள்? என்னை மட்டும் ஏன் சோதிக்கிறாய் எனக் கேட்பவர்கள்? எத்தனைபேர் பணம், புகழ், பதவி, அந்தஸ்த்து, கார், வீடு என்பவை வரும்போது இறைவா எனக்கு மட்டும் ஏன் இப்படி கொடுக்கின்றாய் எனக் கேட்பவர்கள்?

வெட்டப்பட்டு தீட்டப்படாவிட்டால் அது வைரமல்ல, நெருப்பில் இடாவிட்டால் தங்கத்திற்கு புனிதமும் இல்லை. அதுபோல கடவுளை உண்மையாக நம்புவர்கள் எப்போதும் கைவிடப்படமாட்டார்கள்.

பிரச்சினைகளில் ஆழ்ந்து அமிழ்ந்த ஒருவன் ஆரம்பத்தில் இருந்து எனக்கு மட்டும் எனக்கு மட்டும் என கடவுளை நாடுகின்றான் வேண்டுகின்றான். தன் துயருக்காக பிரார்த்திக்கின்றான். எனினும் மேலும் மேலும் அவனுக்கு பிரச்சினைகள் அதிகரிக்க ஒரு கட்டத்தில் இது என்ன எனக் கூறி கடவுளை வெறுக்கத்தொடங்கி விடுகின்றான்.

கேட்கப்படும்போது தரவில்லை என்பதற்காக வெறுக்கும் ஒருவன் கேட்காமலேயே கிடைக்கும் விடயங்களுக்கு கடவுளுக்கு நன்றி செலுத்துவதில்லை. துன்பத்தின் போது கடவுள் தேவை சந்தோசத்தின்போது அவன் தேவையில்லை இதுவே பெரும்பாலும் நடக்கின்றது.

கடவுள் காரணமின்றி எதனையும் செய்வதில்லை உண்மையாக அவனை நினைத்து வழிபட்டுவந்தால் கர்மவினைகள் அகன்று விடும், ஆனால் இதில் முக்கியம் உண்மையான “இறைவழிபாடு. குளித்தேன் கோயிலும் சென்றேன், விழுந்து வணங்கினேன், அர்ச்சினையும் செய்து தேங்காயும் உடைத்தேன் பிரச்சினை மட்டும் தீரவில்லை” என்பதல்ல வழிபாடு. ஆத்மார்த்தமாக இறைவனை வணங்கி அமைதியை மட்டும் கருத்திற்கொண்டு வழிபட வேண்டும்.

சித்தர்களும், முனிகளும் செய்தது இதனையே அப்போது அவர்களுக்கு ஆசைகள் அதிகம் இல்லை தேவைகள் அதிகம் இல்லை அதனால் கடவுளை மட்டுமே சிந்தையில் நிறுத்தினார்கள் அதனால் அவனைக் கண்டார்கள்.

தனிப்பட்ட எந்த மதத்தையும் விட ஒவ்வோர் மதமும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்வது கடவுளைக் காக்க அல்ல, மனித குலத்தை பாதுகாக்கவே, ஒழுக்கத்தில் இருந்து அவர்கள் பிறழாது இருக்கவே அனைத்தும் படைத்தவன் செயல் என்பதை புரிந்து கொள்வோமாக.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg