Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோசைப்பிரியர்களுக்காக கூடச்சுட மசாலா தோசை!

In
Updated: 14:23 GMT, Jan 27, 2018 | Published: 14:23 GMT, Jan 27, 2018 |
0 Comments
1191
This post was written by : Puvanes

தோசைப்பிரியர்கள் அதிகம். இந்திய உணவு வகைகளில் ஒன்றான இந்தத் தோசை தமிழர்களின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று. அதிலும் உணவகங்களில் மாத்திரமே வித்தியாசமான தேசைகளை உண்ணலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.

தோசைகளுக்காக மட்டும் பெயர் பெற்ற உணவகங்கள் உண்டு. அவற்றில் கிடைக்கும் தேசைகளை வீட்டில் தயாரிப்பது கடினம் என்றே பலரும் நினைப்பர் அப்படியான மசாலா தோசையினை வீட்டில் தயாரிப்பது எப்படி எனப்பார்க்கலாம்.

உருளைக்கிழங்கை வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயை மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அதனோடு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கையும் அதனுடன் சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி கிளறி எடுத்துக்கொள்ளவும். தோசைக்கான மசாலா இப்போது தயார்.

அடுத்து தோசைக்கல்லை சூடேற்றி தோசை அதில் மாவை ஊற்றி வார்த்து சுற்றிலும் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி நடுவில் மசால் வைத்து மடித்து எடுக்கவும். சுடச்சுட மசாலா தோசை உருவாகிவிடும். இதனோடு வெங்காய சாம்பார், தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் தனிச்சுவை ஏற்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg