Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா?

In
Updated: 03:51 GMT, May 20, 2018 | Published: 15:44 GMT, May 17, 2018 |
0 Comments
1174
This post was written by : Puvanes

புதுமையாக சிந்திப்பவர்கள் அதாவது வித்தியாசமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பவர்களின் மூளை ஒரே விதமாகவே செயற்படுவதாக அமெரிக்காவின் ஹார்வெர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

குறித்த பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ரோஜர் தலைமையிலான குழு புதுமையாக சிந்திப்பவர்களின் மூளையும், சாதாரணமாக சிந்திப்பர்களினது மூளையும் எவ்வாறு தொழிற்படுகின்றது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வித்துவான்கள் மற்றும் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உட்பட பலருக்கும் ஒரே பொருளைக் கொடுத்து அதன் மூலம் என்ன செய்யலாம் என்ற கேள்வியை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அந்தக்கேள்விக்கு பதில் கூற புதுமையாக சிந்திப்பவர்கள் அனைவரது மூளையும் ஒரே வகையில் செயற்பட்டுள்ளது என்பதை ரோஜர் குழு கண்டுபிடித்துள்ளனர்.

புதுமையாக சிந்திப்பவர்கள் மூளையின் சிந்தனைத்திறனை நெறிப்படுத்தக்கூடிய மூன்று பகுதிகளையும் ஒரே நேரத்தில் செயற்படுத்தி அதன் மூலமாக சிந்தித்துள்ளனர். எனினும் சாதாரணமாக சித்தித்தவர்கள் அந்த மூன்று பகுதிகளையும் ஒருங்கிணைக்காமல் பதில் கூறியுள்ளனர்.

இந்த விடயமே ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்களுக்கும், சாதாரணமாக சிந்திப்பவர்களுக்கும் இடையே காணப்பட்டுள்ள வேறுபாடு எனவும் ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வினைத் தொடர்ந்து மூளையில் காணப்படும் சிந்தனைத் திறனை நெறிப்படுத்தும் முகாம்களை இணைத்து சிந்திக்க பயிற்சிகள் வழங்கினால் சாதாரணமாக சிந்திப்பவர்களும் ஆக்கபூர்வமானவர்களாக மாற்றமடைவார்களா? என்ற ஆய்வில் அதே ஆய்வுக் குழுவினர் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.

இந்த முயற்சி வெற்றியளிக்குமானால் சாதாரண சிந்திப்பவர்களையும் விஞ்ஞானிகளைப்போல் படைப்பாளிகளைப்போல் சிந்திக்க வைக்க முடியுமானதாக இருக்கும். எனினும் ஒவ்வொருவர் சிந்தனையும் மாறுபட்டது என்பதால் இது சாத்தியம் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் தற்போது மனிதர்களுக்கு காணப்படும் அறிவு வளர்ச்சியும், சிந்தனைத் திறனும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg