Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமிவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

In
Updated: 15:50 GMT, Jan 27, 2018 | Published: 15:50 GMT, Jan 27, 2018 |
0 Comments
1542
This post was written by : Puvanes

பூமியை பாதுகாக்க இயற்கை தாமாக உருவாக்கியதே ஓசோன் படலம். இந்த படலம் எனும் அரண் இருப்பதாலேயே புவி வெப்பமடைதலும், சூரியக்கதிர்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவர்.

எனினும் இந்த ஓசோன் படலத்தில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். இது மிகவும் ஆபத்தான விடயம் எனவும் விஞ்ஞானிகள் கூறிவந்தனர்.

இந்தநிலையில் தற்போது ஓசோனில் ஏற்பட்டிருந்த பாரிய துளையின் அளவு சிறிதாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பூமி தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி இதுவாகவே இருக்க வேண்டும்.

பூமியைக்காக்கும் ஓசோன் படலத்திற்கு மனித செயற்பாடுகளால் உருவாகும் நச்சு வாயுக்களினால் ஆபத்து என்பதால் 1989ஆம் குளோரோ புளோரோ கார்பன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் உலக நாடுகளிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதேபோல தொடர்ந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த ஓசோன் பாதிப்பும், பூமியின் ஆபத்தையும் விளக்கும் வகையில் பிரகடங்களை மேற்கொண்டு வந்தனர். இதன் பலனாக தற்போது ஓசோன் படலத்தின் துளை அளவில் சிறிதாகியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே வகையில் தொடர்ந்தும் ஓசோன் படலம் பாதுகாக்கப்படுமானால் சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பூமியும் மனித குலமும் பாதுகாக்கப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg