Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விலங்குகள் மட்டும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி?

In
Published: 16:08 GMT, Jan 27, 2018 |
0 Comments
1380
This post was written by : Puvanes
birds001

நிலநடுக்கம் என்பது உலகில் பாரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். இந்த நிலநடுக்கத்தை உருவாகும் முன்னரே கணிக்க மனிதர்கள் எத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டு சாதனங்களை கண்டுபிடித்தாலும் அதன் பலன்கள் மட்டும் மிகச் சிறிய அளவே.

அந்த வகையில் மனிதர்கள் கண்டுபிடித்த உபகரணங்கள் பல நில நடுக்கங்களை முன்கூட்டியே சொல்வது இல்லை. ஆனால் விலங்குகள் நில நடுக்கங்களை முன்கூட்டியேதுல்லியமாக அறிந்து கொள்கின்றன.

அதனால் சட்டென்று நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் இருந்து இடம்பெயர்ந்து தம்மை பாதுகாத்துக்கொள்கின்றன. இது எப்படி சாத்தியம்? மனித ஆற்றலினால் கண்டுபிடிக்கமுடியாத விடயத்தினை விலங்குகள் எவ்வாறு அறிந்து கொள்கின்றன?

இந்தக் கேள்விக்கு தற்போது ஆய்வாளர்கள் விடைகளை முன்வைத்துள்ளனர் அதாவது, பெரும்பாலான விலங்குகள் அதிகமாக தரையில் காதுகளை வைத்தே உறங்குகின்றன.

இதனால் தரைக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்புகள் அதிமாகின்றது. தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளையும் விலங்குகள் அறிந்துகொண்டு தம்மை பாதுகாத்துக்கொள்கின்றன.

நிலஅதிர்வு உண்டாகும் முன்னர் பூமிக்கடியில் உள்ள எரிமலைக்குழம்பின் அதிர்வுகளை விலங்குகள் உணர்ந்து கொள்வதால் நிலநடுக்கத்தை உணர்ந்து கொள்கின்றன.

அதேபோன்று நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்னர் நிலத்தில் இருந்து ஒரு கந்தகத்தின் வாசனை வெளிப்படுத்தப்படும் எனவும் குறித்த வாசனையை உணர்ந்து கொள்ளும் திறன் விலங்குகள் பெற்றுக்கொண்டுள்ளன என்பது ஆச்சரியமான விடயம்.

நிலத்தில் இருங்கும் விலங்குகள் நிலநடுக்கத்தை இவ்வாறு உணர்ந்து கொள்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அப்படியாயின் பறவைகள் எவ்வாறு நிலநடுக்கத்தை உணர்ந்து கொள்கின்றன என்ற கேள்வியும் எழுந்துவிடலாம்.

பறவைகளுக்கும் அதிர்வலைகளை துல்லியமாக அறிந்துகொள்ளும் திறன் உண்டு அதேபோன்று நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் கடல் நீர் வழமைக்கு மாறான நிறத்தில் காணப்படும். இந்த கடல் மாற்றங்கள் மூலம் நிலநடுக்கம் ஏற்படப்போகின்றது என்பதனை பறவைகளும் கணித்துக்கொள்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg