Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலம்பியாவில் குண்டு வெடிப்பு: 4 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:36 GMT, Jan 28, 2018 | Published: 04:36 GMT, Jan 28, 2018 |
0 Comments
1304
This post was written by : Suganthini

கொலம்பியாவில் பொலிஸ் நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 42 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலம்பியாவின் கரையோர நகரான Barranquilla நகரிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று (சனிக்கிழமை) இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.

மேற்படி பொலிஸ் நிலையத்தில் காலைவேளைக் கடமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூடியிருந்தபோதே, குண்டு வெடிப்பு இடம்பெற்றதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg