Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் 100ஆக அதிகரிப்பு

In உலகம்
Updated: 05:24 GMT, Jan 28, 2018 | Published: 05:24 GMT, Jan 28, 2018 |
0 Comments
1257
This post was written by : Suganthini

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ள அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக அதிகரித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உயர் சமாதான அலுவலகம், ஆப்கானிஸ்தானின் பழைய உட்துறை அமைச்சுக் கட்டடம் ஆகியவற்றுக்கு அருகில் நேற்று (சனிக்கிழமை) இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.

வெடிபொருட்கள் நிரப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திச்சென்ற தாக்குதல்தாரிகள், காபூலிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியைக் கடந்துசென்று வெடிக்க வைத்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்தக் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பினர், தாமே குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg