Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் குற்றச்சாட்டில் கைதான சவுதி கோடீஸ்வரர் அல் வாலித் விடுதலை

In உலகம்
Updated: 11:21 GMT, Jan 28, 2018 | Published: 11:21 GMT, Jan 28, 2018 |
0 Comments
1085
This post was written by : Suganthini

சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த உலகின் முன்னணிக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இளவரசர் அல் வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இளவரசர் அல் வாலீத் பின் தலால் முன்வைத்த நிதித் தீர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக, சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் ஊழலுக்கு எதிரான குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில், அக்குழுவினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இளவரசர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் உள்ளடங்கலாக சுமார் 200 பேர், கடந்த 2017ஆம் ஆண்டு நொவம்பர் கைதுசெய்யப்பட்டு ரியாத்திலுள்ள சொகுசு விடுதியொன்றில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதேவேளை, அல் வாலீத் மட்டுமன்றி, அவருடன் கைதான பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சொகுசு விடுதி, எதிர்வரும் காதலர் தினத்தன்று மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளதால், அவ்விடுதியிலுள்ள ஏனையோர் சிறைக்கு அனுப்பப்படலாமெனவும் நம்பப்படுகின்றது.

மேலும், கடந்த வருடம் நொவம்பரில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அல் வாலீத் 45ஆவது இடத்திலிருந்தார். அவரது சொத்து மதிப்பு 17 பில்லியன் டொலர்களாகும். இவருக்கு உலகம் பூராகவும் சொத்து இருப்பதுடன், டுவீட்டர் மற்றும் ஆப்பிளின் பெரும் பங்குகளையும் அவர் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg