Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இ.தொ.க, சுதந்திர கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம்

In இலங்கை
Updated: 12:40 GMT, Jan 28, 2018 | Published: 12:40 GMT, Jan 28, 2018 |
0 Comments
1206
This post was written by : Surenth

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பிலும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ.திஸாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அம்மாவாசை ராமையா, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன், மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC06836 vlcsnap-2018-01-28-15h42m01s129 vlcsnap-2018-01-28-15h42m15s043 vlcsnap-2018-01-28-15h42m40s011 vlcsnap-2018-01-28-15h43m06s379 vlcsnap-2018-01-28-15h41m25s353

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg