Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயிற்சியும் மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் – பெடரர்

In டெனிஸ்
Updated: 04:26 GMT, Jan 29, 2018 | Published: 04:26 GMT, Jan 29, 2018 |
0 Comments
1112
This post was written by : Litharsan

“வயது என்பது வெறும் எண்ணிக்கையே. சிறந்த பயிற்சி மற்றும் மனவுறுதி இருந்தால் வெற்றி பெறலாம்” என்று சுவிட்ஸர்லாந்து வீரர்  ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட பெடரர், வெற்றிக்குப் பின் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த ஆண்டை சிறப்பான முறையில் ஆரம்பித்துள்ளேன், எனது வெற்றிக்குக் காரணமான பயிற்சியாளர்கள், ரசிகர்களுக்கு நன்றி” என்றார். பின்னர் உணர்ச்சி மிகுதியில் தேம்பித் தேம்பி அழுதார். ரசிகர்களும் அவரைப் பார்த்து பரவசம் அடைந்தனர்.

இந்த நூற்றாண்டில் இதுவரை நடைபெற்றுள்ள டென்னிஸ் தொடர்களில் 27 சதவீத போட்டிகளில் பெடரர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன்  1968ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்ற இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 10 சதவீதமான சம்பியன் பட்டத்தை பெடரரே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg