Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செய்ன் ஆறு பெருக்கெடுக்கும் அபாயம்: பரிஸில் சுமார் 1,500 பேர் வெளியேற்றம் 

In ஐரோப்பா
Updated: 05:44 GMT, Jan 29, 2018 | Published: 05:44 GMT, Jan 29, 2018 |
0 Comments
1266
This post was written by : Suganthini

செய்ன் ஆறு பெருக்கெடுக்கும் அபாயத்திலுள்ளதால், பரிஸிலுள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடந்த சில நாட்களாகவிருந்து அடை மழை பெய்துவருவதைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. தற்போது இந்த ஆற்றின் நீர்மட்டம் 6 மீற்றர் உயரத்துக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில், செய்ன் ஆறு பெருக்கெடுக்கும் அபாயத்திலுள்ளதாகவும், இதன் காரணமாக பரிஸில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும்,  பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg