Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடிக்கு ராணுவ நடவடிக்கையால் தீர்வில்லை – பிரான்ஸ்

In உலகம்
Updated: 10:38 GMT, Jan 29, 2018 | Published: 10:38 GMT, Jan 29, 2018 |
0 Comments
1158
This post was written by : Suganthini

வடகொரியாவின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள எந்தவொரு நாடும் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முற்படுமென்று தான் எண்ணவில்லையென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லீ ட்ரையன் (JEAN-YVES LE DRIAN ) தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இன்று (திங்கட்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியாவின் நெருக்கடிக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதால், எந்தவிதத் தீர்வும் கிடைக்காது.

மேலும், வடகொரியாவின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள எந்தவொரு நாடும், ராணுவ நடவடிக்கை மூலமாகத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முற்படுமென்று நான் எண்ணவில்லை’ என்றார்.

இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு இரு கொரியாக்களுக்கிடையில் நடைபெற்றுவரும் கலந்துரையாடலுக்கு அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளபோதும்;, சமாதான நடவடிக்கை நீடிக்கப் போவதில்லையென்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg