Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய கூட்டமைப்பு பலமடைய வேண்டும்: சுமந்திரன்

In இலங்கை
Updated: 07:16 GMT, Jan 30, 2018 | Published: 07:14 GMT, Jan 30, 2018 |
0 Comments
1221
This post was written by : Varshini

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவிற்கான பலன், இன்னும் கிடைக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, அரச தரப்புடன் எதிர்த்தரப்பில் அமர்ந்து பேசி, தமிழர்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க, கூட்டமைப்பு பலமான நிலையில் இருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக தமிழர்கள் ஒரே அணியில் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

துணுக்காயில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

”தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை. தமிழர்களுடைய அபிலாஷைகளை நிறைவு செய்து தீர்வு கிடைக்கும்வரை நாம் ஒரே அணியில் நிற்கவேண்டும்.

எமக்கு எதிரணியாக இருக்கும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி நாம், எம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டிய தேவையுள்ளது.

எந்தப் பிரச்சினைக்காக நாம் பெரிய விலையைக் கொடுத்தோமோ, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோமோ, எத்தனையோ விதமான அபிவிருத்திகளை புறந்தள்ளி எங்களுடைய அடிப்படையான அரசியல் உரிமை எல்லாவற்றையும் விட முக்கியமானது எனச் சொல்லி போராடிக்கொண்டிக்கிறோமோ, அதற்கு ஒரு முடிவு வரும் வரை அரசாங்கத்திற்கு எதிர்த்திசையில் அமர்ந்திருந்துதான் இந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். அதன்போது, எங்கள் கரங்கள் பலமானதாக இருக்க வேண்டும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg