Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேட்பாளர் உட்பட இருவர் விபத்தில் படுகாயம்

In இலங்கை
Published: 11:36 GMT, Jan 30, 2018 |
0 Comments
1108
This post was written by : Litharsan
2

ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகர பிரதான வீதியில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேருக்குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான ஜவாஹிர் மௌலவி (வயது 30) மற்றும் எம்.ஹனிபா (வயது 59) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வேட்பாளர் ஜவாஹிர் மௌலவி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg