Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை சீனா ஆதரிக்கும்: சிறப்பு தூதுவர்

In
Published: 07:17 GMT, Jan 31, 2018 |
0 Comments
1132
This post was written by : Risha

சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஊக்குவிப்பதற்கும், சிரியாவில் சமாதான நிலைமையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் என சீன அரசாங்கத்தின் சிறப்பு தூதுவரொருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சிரிய பிரச்சினை குறித்த தேசிய கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, சிரிய சமான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்வதற்கான ரஷ்யாவின் முயற்சிகளுக்கு, அவர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

சிரிய பிரச்சினை பேச்சுவார்த்தையின் மூலமே தீர்க்கப்பட முடியும் என வலுவாக நம்புவதாக தெரிவித்த அவர், சாத்தியமான தீர்வை எட்டுவதற்கு அரசியல் ரீதியான ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், யுத்த பாதிப்பிற்குள்ளான சிரியாவிற்கு சீன அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதுடன், சிரிய நாட்டை மறுசீரமைப்பதற்கு சீன நிறுவனங்கள் தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg