Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணமோசடியில் ஈடுபட்டவருக்கு பிணை

In இலங்கை
Updated: 11:59 GMT, Jan 31, 2018 | Published: 09:35 GMT, Jan 31, 2018 |
0 Comments
1154
This post was written by : poovannan

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பணமோசடி செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மூதூர் – அக்கரைச்சேனையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் (வயது – 43) நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவருடன் இணைந்து பணமோசடியில் ஈடுபட்டமை தெரியவந்தது. இவரால் ஏமாற்றப்பட்ட இருவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர், கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg