Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்தார் ஆசியாவின் சிறந்த வலைப்பந்து வீராங்கனை!

In
Updated: 11:42 GMT, Jan 31, 2018 | Published: 09:47 GMT, Jan 31, 2018 |
0 Comments
1166
This post was written by : Thavarajasingam Breesnove

தேசிய வலைப்பந்து அணியின் முன்னாள் இணைத் தலைவி தர்ஜினி சிவலிங்கம், 3 வருடங்களுக்குப் பின் மீண்டும் தேசிய வலைப்பந்தாட்ட குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப கட்ட குழாமுக்கான தெரிவுப் போட்டிகள் கடந்த வாரம் பண்டாரகம உள்ளக அரங்கில் இடம்பெற்றிருந்தது. இத்தெரிவின்போதே தர்ஜினி தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 4 தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் தர்ஜினி பங்குபற்றியுள்ளாா்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க முக்கியமானவராக இருந்த தர்ஜினி, 2009ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஆசியாவின் சிறந்த கோல்போடும் வீராங்கனையாகவும் (சூட்டர்) தெரிவாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து தேசிய வலைப்பந்து அணியின் இணைத் தலைவியாகவும் செயற்பட்டார்.

இறுதியாக 2014ஆம் ஆண்டு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் திறமையாக விளையாடி இலங்கை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றிருந்த பெருமை இவரை சாரும்.

தர்ஜினி சிவலிங்கம் முதற்தடவையாக அவுஸ்ரேலியாவின் வெஸ்ட் பெல்கன்ஸ் மற்றும் மெல்பேர்ன் சென்ட். எல்பன்ஸ் அணிகளுக்காக கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்படி, கடந்த வருடம் இரு கட்டங்களாக நடைபெற்ற லீக் போட்டிகளில் பலம்மிக்க 20இற்கும் அதிகமான அணிகளுடன் தர்ஜினி  விளையாடியிருந்தார்.

இதில் விக்டோரியா வலைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் வெஸ்ட் பெல்கன்ஸ் அணிக்கு தர்ஜினி தலைமை ஏற்றிருந்தார். அங்கு விளையாடி 20 போட்டிகளில் 823 புள்ளிகளை பெற்றிருந்தார். அத்துடன், அவ்வணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்தி ஆண்டின் சிறந்த கோல்போடும் மற்றும் நேர்மையான வீராங்கனைக்கான விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.

தேசிய வலைப்பந்தாட்ட குழாமிற்கான 2ஆவது கட்ட தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம், 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg