Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா மீதான தடையை விலக்க சீனா ஒப்புதல்

In
Published: 12:13 GMT, Jan 31, 2018 |
0 Comments
1140
This post was written by : Risha

பிரித்தானியாவிலிருந்து சீனாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கான தடையை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், இன்று (புதன்கிழமை) சீன பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்த போதே இந்த ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாட்டிறைச்சி ஏற்றுமதி தடையானது எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் விலக்கப்படும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள இத்தருணத்தில், சீனாவுடனான உறவை வலுப்படுத்த உறுதியாகவுள்ளதாகவும், எதிர்கால வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும் பிரதமர் மே குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தெரேசா மே, சீனா விஜயம் செய்துள்ள நிலையில் இன்றைய முதல் நாளிலேயே இந்த ஒப்புதல் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg