Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதியுதவியை வலுவூட்டும் பிரான்ஸ் ஜனாதிபதியின் துனிசிய விஜயம்

In ஐரோப்பா
Updated: 07:23 GMT, Feb 1, 2018 | Published: 07:23 GMT, Feb 1, 2018 |
0 Comments
1134
This post was written by : Elakkiya

துனிசியாவுக்கு புதிய நிதியளிப்பில் 272 மில்லியன் யூரோக்கள் வழங்குவதாகவும் இந்த நிதி ஆபிரிக்க தேசிய ஜனநாயக மாற்றத்தை உயர்த்த முற்படும் என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) துனிசியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்போது, 177 மில்லியன் யூரோ கடன்கள், 50 மில்லியன் யூரோ உதவி, 30 மில்லியன் யூரோ கடன் நிவாரணம் மற்றும் 15 மில்லியன் யூரோ கடன் வரி ஆகியன இவற்றில் உள்ளடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டுக்கு இடையில் 1.2 பில்லியன் யூரோக்களை துனிசியாவுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் ஏற்கனவே உறுதியளித்திருந்தது. இந்நிலையில் துனிசியாவுக்கான இரண்டுநாள் விஜயத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி அதனை மீள உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது 2020 முதல் 2022 காலப்பகுதிக்குள் மேலதிகமாக 500 மில்லியன் யூரோக்களை வழங்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg