Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலின் எதிர்காலம் குறித்து ஜேர்மனி கவலை

In ஐரோப்பா
Updated: 10:12 GMT, Feb 1, 2018 | Published: 10:11 GMT, Feb 1, 2018 |
0 Comments
1154
This post was written by : Elakkiya

இஸ்ரேலின் எதிர்காலம் தொடர்பாக ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியல் கவலை வெளியிட்டுள்ளார்.

இரு மாநில தீர்வு தொடர்பாக டெல் அவிவ் அரசாங்கத்தின் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரக்தியை அதிகரிப்பதாகவும்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல் அவிவ்வில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய கப்ரியல் இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததுடன் இஸ்ரேலிய அமைச்சரவையில் பல உறுப்பினர்கள் இரு மாநில தீர்வுக்கு எதிராக வெளிப்படையாகவே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இஸ்ரேலின் செயல்களால் ஐரோப்பாவின் விரக்தி அதிகரித்து செல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இரு மாநில தீர்வானது, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இஸ்ரேலிய பலஸ்தீன சமாதானத்திற்கும் பெருமளவிலான நிதியுதவிக்கும் தாம் எடுக்கும் உறுதியான அடித்தளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இரு மாநில தீர்வுக்கான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் ஆதரிக்கவில்லைய என்றும் கப்ரியல் கேள்வி எழுப்பியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg