Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் – எரித்திரியாவில் புதிய சட்டம்!

In
Published: 17:16 GMT, Feb 1, 2018 |
0 Comments
1416
This post was written by : Litharsan
1200px-Flag_of_Eritrea.svg

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையிலேயே எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்திரியாவில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் அதிகரித்து வருகின்றது.

இதனை சமப்படுத்துவதற்கு, அந்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, அல்லது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று குறித்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஆண் இரண்டுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தால் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg