Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

In
Updated: 12:10 GMT, Feb 2, 2018 | Published: 04:03 GMT, Feb 2, 2018 |
0 Comments
1116
This post was written by : Thavarajasingam Breesnove

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் நேற்று பிற்பகல் 02.30 மணியளவில் போட்டிகள் ஆரம்பமானது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு, பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடையங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg