Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய மோசடியாளர்களை தண்டிக்க புதிய சட்டங்கள் வேண்டும்- வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 05:09 GMT, Feb 2, 2018 | Published: 05:09 GMT, Feb 2, 2018 |
0 Comments
1123
This post was written by : Thavarajasingam Breesnove

நாட்டில் பாரிய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற “மார்ச்-12” இயக்கத்தின் தூய அரசியலை ஏற்படுத்தும் கருத்தாடல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள பிணைமுறி போன்ற பல்வேறு குற்றங்களுக்கு 20 வருடங்களை கடந்தும் குற்றவாளிகளை  சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலையேற்படும்.

இன்று தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தாங்கள் செய்த சேவையினை விட மற்றவர்களை தாழ்த்தி பேசுவதையும் விமர்சிப்பதையுமே செய்துவருவதை காணமுடிகின்றது. இந்நிலையினை விடுத்து தங்களது வெற்றியை நோக்கி பயணித்தால் அல்லது மக்கள் முன்பாக தாங்கள் செய்த சேவைகளை பரப்புரைசெய்தால் நிச்சயமாக அந்த மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். இதுவே யதார்த்தமாகும்.

இன்று நாங்கள் தூய்மையான அரசியலைப்பற்றி பேசுகின்றோம். சில போலியான முகப்புத்தகங்களில் பெண் வேட்பாளர்கள் சிலரை தகாத வார்தைகளினால் விமர்சிப்பதாகவும், இதனால் தாங்கள் தேர்தலில் இருந்து விலகப்போவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த சூழல்மாற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg